அமீரகப் பதிவர்களின் அட்டகாசச் சுற்றுலா
துபாயிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் எழில் கொஞ்சும் கொர்ஃபக்கான் கடற்கரை நகரை நோக்கி வரும் ஆறாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துவங்குகிறது
வெறும் சுற்றுலாவாக இல்லாமல் பல்சுவை நிகழ்ச்சிகள் போட்டிகள் பரிசுகள் என்று அமர்க்களப்படுத்தியே தீர்வதென்று கங்கணம் கட்டிக் கொண்டு அமீரகபபதிவர்கள் ஆவலாயத் திரிகிறார்கள்
இங்கே சில விசயஙக்ளைச் சொல்லியே ஆகணும்
10-10 கிரிக்கெட்
"ஆதவா, நீ பெரிய கிரிக்கெட் பிளேய்ராமே?"
"யாரு அண்ணாச்சி இப்படி கெளப்பி விட்டது?"
"அப்ப நீ கிரிக்கெட் பிளேயர் இல்லையா?"
"யாரு சொன்னா அண்ணாச்சி? புது வண்ணாரப்பேட்டைல வெண்ணிலா கபடி குழு மாதிரி நாங்களும்"
"டேய்.. கபடி வேற கிரிக்கெட் வேறன்னு கூடத் தெரியாத உன்னைப் போய் கிரிக்கெட் ப்ளேய்ரன்னு சொல்லிட்டேனே?"
"அண்ணாச்சி. அப்படின்னா அது வேறயா?"
"டேய் குசும்பா நல்லா பார்த்துக்கோ இதுதான் பவுண்டரி லைன்"
"அதுசரி அண்ணாச்சி. சிக்ஸர் லைன் எங்க இருக்கு?"
ந்லலவேளையா அவன் ஊருலயே இல்லை.இவங்களை வச்சுக்கிட்டுத்தான் கிரிக்கெட்
பாட்டுக்குப் பாட்டு
ஒருத்தன் பாடுனாலே வெளங்காது இதுல அதுக்கு எதிர்ப்பாட்டு வேறயான்னு கேட்டாலும் வேற வழியில்ல. நடத்தியே தீரணும்னு தெளிவா இருக்காங்க.
பேப்பர் பிரசண்டேஷன்
"ஏம்பா, இந்த மாதிரி பதிவர் சந்திப்புல எல்லாம் பேப்பர் பிரசண்டேஷன் மாதிரி ஏதாவது பண்ணினா நம்மைப் பத்தி இந்த உலகம் பெருசா நெனைக்காது?"
"உங்க கூட சேர்ந்ததுக்கப்புறம் அப்படில்லாம் நெனைக்கும்னு நெனைக்குறதே தப்பு அண்ணாச்சி"
"லே சென்ஷி! இந்த கீழை ராஸாவை அடுத்த டூர்ல கட் பண்ணிடு"
"சரிங்க அண்ணாச்சி. அவர் வெவரம் தெரியாம ஏதாவது சொல்லுவாரு. உங்க ஆசைப்படியே நான் பேப்பர் பிரசெண்ட் பண்ணட்டுமா?"
கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க சென்ஷியப் பார்த்தேன்
"ஆனா என்ன பேப்பர்னு தெளிவாச் சொல்லிடுங்க அண்ணாச்சி. கல்ஃப் நியூஸா, கலீஜ் டைம்ஸா?"
வினாடி வினா
"அழகிரிக்கு நெருங்கிய அமீரகப் பதிவர் யார்?"
"அமீரகத்தின் ஒரே பிரபல பதிவர் யார்?"
இன்னும் பல சுவாரஸ்ய கேள்விகளும் பதில்களும்
அமீரகம் வாழ் பதிவர்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் பரந்து வாழும் பதிவர்களுக்கு இப்படி ஓர் அற்புத வாய்ப்பு இனி எப்போது கிடைக்குமென்று சொல்ல இயலாதென்பதால்.. எங்களோடு இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
விமானச் சீட்டு, விசா போன்ற விசயங்களை நீங்களே ஏற்பாடு செய்து வந்து விட்டால் குளு குளு சொகுசுப் பேருந்து பயணத்திற்கான செலவையும், அட்டகாசமான பிரியாணி செலவையும், மாலைத் தேநீரையும் நாங்களே உங்களுக்கு இலவசமாகத் தருவோம்.
இதுவரை முன்பதிவு செய்துகொள்ளாத அமீரகப் பதிவர்கள் நாளை மாலைக்குள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
ஆசிப் மீரான் 050 655 02 45
கீழை ராஸா 050 418 42 45
சென்ஷி 050 314 60 41



31 comments:
//"அழகிரிக்கு நெருங்கிய அமீரகப் பதிவர் யார்?"
"அமீரகத்தின் ஒரே பிரபல பதிவர் யார்?"
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கோர்பக்கான கலக்கிடுவோம் :)
இந்த சுற்றுலா பதிவர் வரலாற்றில் அழியா இடம் பெறப்போவது உறுதி...
நமக்கு "வரலாறு" முக்கியம் அண்ணாச்சி
யார்லாம் போறாங்கன்னு சொல்லி ஒரு பப்ளிசிட்டி கொடுத்திருக்கலாமோ?
எப்படியோ கோபர்கன் ஒரு வழியாகபோவுது..
//"ஆனா என்ன பேப்பர்னு தெளிவாச் சொல்லிடுங்க அண்ணாச்சி. கல்ஃப் நியூஸா, கலீஜ் டைம்ஸா?"//
பேப்பர் மேட்டரை விடுங்க அண்ணாச்சி சுற்றுலாவிலே கொறிக்க வேப்பர் பிஸ்கெட் வாங்கவே வேணாமா..?
எப்பவுமே அலர்ட்டா இருப்போமுலா?
//"ஆனா என்ன பேப்பர்னு தெளிவாச் சொல்லிடுங்க அண்ணாச்சி. கல்ஃப் நியூஸா, கலீஜ் டைம்ஸா?"//
பேப்பர் மேட்டரை விடுங்க அண்ணாச்சி சுற்றுலாவிலே கொறிக்க வேப்பர் பிஸ்கெட் வாங்கவே வேணாமா..?
எப்பவுமே அலர்ட்டா இருப்போமுலா?
இதையெல்லாம் நாங்க துபாய் வர்றப்போ செய்ய மாட்டிங்களே!!! நல்லா இருங்க
+
:)
நினைத்தபடி உங்க பயணம் அமைய வாழ்த்துக்கள்
ஃபேமிலி இல்லியா? ஒன்லி பேசுலர் தானா
:)))
பதிவர் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்.
எகிப்து பயணத்தில் இருப்பதால் இந்த பயணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை அண்ணாச்சி.....
அண்ணாச்சி, கலக்கல். அதுவும் குசும்பன் கமெண்ட் தூள்!
அண்ணாச்சி இந்த டூரோட ஸ்பெஷாலிட்டியே குசும்பன் இல்லாம போறதுதான்
:)
"அழகிரிக்கு நெருங்கிய அமீரகப் பதிவர் யார்?" = ABI APPAAAAAA
"அமீரகத்தின் ஒரே பிரபல பதிவர் யார்?" = THE ONE AND ONE AND ONE AND ONLY ONLY RAD MADHAV :-)
கிரிக்கெட் போட்டிக்கு என்னை அண்ணாச்சி நடுவராகத் தேர்ந்தெடுத்து
விட்டார் என்பதையும் மன உவகையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.... :-)
வரும் அனைவருக்கும் அண்ணாச்சியின் செலவில் மட்டன் பிரியாணி இலவசம் என்பதை
அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்...
அண்ணாச்சி, வினாடி-வினாவில, அமீரகத்திலிருந்து தற்போது பதிவுலகில் புயலாய் கலக்கிக் கொண்டிருக்கும் புதுமுகப் பெண் பதிவர் யார்ங்கிற கேள்வியை மறந்துறாதீங்க.
யாராவது இங்கன இருக்கிற மகாபலிபுரத்துக்கு என்னை விட்டுட்டு போனாலே வயிற்றெரிச்சல் படுவேன்..
ம்...
பொறாமை தூண்டும் விஷயம்.!
கோர்பக்கான கலக்கிடுவோம் :)ரிபீட்டு
செந்தில்வேலனும் நானும் சத்திரத்துக்கே வந்து உங்க கூட பேசிட்டு அப்படியே கிளம்புவோம் அண்ணாச்சி.
\\எம்.எம்.அப்துல்லா said...
அண்ணாச்சி இந்த டூரோட ஸ்பெஷாலிட்டியே குசும்பன் இல்லாம போறதுதான்
:)
\\
எப்பூடி கரக்கிட்ட சொல்லிட்டிங்க ;))
\\உங்க கூட பேசிட்டு அப்படியே கிளம்புவோம் அண்ணாச்சி.
\\
அய்யோ அண்ணாச்சியை பத்தி இந்த பச்சைபுள்ள பேசுது ;))))
//விமானச் சீட்டு, விசா போன்ற விசயங்களை நீங்களே ஏற்பாடு செய்து வந்து விட்டால் குளு குளு சொகுசுப் பேருந்து பயணத்திற்கான செலவையும், அட்டகாசமான பிரியாணி செலவையும், மாலைத் தேநீரையும் நாங்களே உங்களுக்கு இலவசமாகத் தருவோம்.//
ஆஹா ஆசைய கெளப்பிவிட்டுட்டீங்களே!!!
குசும்பன் கமெண்ட் கலக்கல் :))))
ஓய் ஆசிப்
கொர்ஃபகான் Oceanic Hotel ல் பஃபே வாங்கித் தந்தால் நானும் வருவேன்.
அமர்வு சிறக்க வாழ்த்துக்கள்
அமீரகப் பதிவர்களின் சுற்றுலா பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன் ..!
//"டேய் குசும்பா நல்லா பார்த்துக்கோ இதுதான் பவுண்டரி லைன்"//
திட்டமிட்டு, சதிசெய்து நான் ஊரில் இல்லாத நேரமாக பார்த்து டூர் பிளான் செஞ்சுட்டீங்கதானே அதுக்கு நான் கொடுக்கிறேன் பாருங்க சாபம்...கடைசி நேரத்திலாவது சுபையர் மனம் மாறி உங்க கூட வந்துடுவார்.
// கீழை ராஸா said...
இந்த சுற்றுலா பதிவர் வரலாற்றில் அழியா இடம் பெறப்போவது உறுதி...//
ஏன் அறிவியல்,சமூக அறிவியல்,கணிதம் இதில் எல்லாம் இடம் பெறாதா?
//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணாச்சி இந்த டூரோட ஸ்பெஷாலிட்டியே குசும்பன் இல்லாம போறதுதான்
:)///
காது வலி வந்தாலும் வாய் அடங்காதே! உங்களை எல்லாம்.......கவனிச்சுக்கிறேன்.
ஒருத்தன் பாடுனாலே வெளங்காது இதுல அதுக்கு எதிர்ப்பாட்டு வேறயான்னு கேட்டாலும் வேற வழியில்ல. நடத்தியே தீரணும்னு தெளிவா இருக்காங்க.//
அப்பாடா நான் கூட என்னை விட்டுவிட்டு போறீங்களேன்னு கொஞ்ச அவசரப்பட்டு நினைச்சுட்டேன்... கோபியும், ஆதவனும் பாடுற மாதிரி நினைச்சாலே வயிறு கலங்குது!அதுக்கு நீங்க எதிர் பாட்டு என்றாலே அவ்வ்வ்வ்வ் அம்மாடி மீ தி எஸ்கேப்பு!!!
(ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான் என்பது புரியுது அண்ணாச்சி)
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !
நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com
கலக்கல்!!!!!!!
அமீரகப் பதிவர்களின் சுற்றுலா @ கொர்ஃபகான் போயிட்டு வந்து ஒரு வாரம் ஆக போறது இன்னும் நீங்க அதபத்தி பதிவ போடல சீக்கிரம் போடுவிங்களா ? சென்ஷி பதிவ ஏற்கனேவே படிச்சிட்டாலும் உங்க பதிவை விரைவில் எதிர்பார்கிறேன் ..
ஆசிப் வாழ்த்துக்கள்
Post a Comment