11 August 2009

கழிவிரக்கம்


நிழலற்ற சாலையோரம் ந்டந்து போகிறேன்
கரியமில வாயுவை
உமிழ்ந்து கொண்டு உறுமும்
கனரக வாகனங்கள் நிறைந்த நெடுஞ்சாலை
மேகங்களற்ற ஆகாயம் பழுப்பாகப் பரந்திருக்கிறது
புழுதிக் காற்று சுழன்றடிக்கும்போதும்
சதைத் துளைகளும் எரிகின்றன
வெம்மை தாங்காமல்
வியர்வை
கண்களில் வழிய
முதுகில் சட்டை ஒட்டிப்பிடிக்க
தொடர்ந்தும்
நடந்து கொண்டிருக்கிறேன்
என்னைப் பற்றிய கழிவிரக்கங்கள் ஏதுமின்றி
கடந்து போகும் குளிரூட்டப்பட்ட வாகனங்களிலும்
இருக்கக் கூடும்
வெம்பிப் பழுத்த வேதனையுடன்
சில மனிதர்கள்

21 comments:

காயத்ரி said...

என்ன இது வேதம் சாத்தான் ஓதுது?? :)

காயத்ரி said...

ஆஹா! ஓஹோ! அருமையான கவுஜ.

ஆயில்யன் said...

//என்னைப் பற்றிய கழிவிரக்கங்கள் ஏதுமின்றி
கடந்து போகும் குளிரூட்டப்பட்ட வாகனங்களிலும்
இருக்கக் கூடும்
வெம்பிப் பழுத்த வேதனையுடன்
சில மனிதர்கள்//


நடந்து செல்லும் வேளைகளில் நினைத்துப்பார்க்க தோன்றும் பல நேரங்களில்....! :(

ச.செந்தில்வேலன் said...

அண்ணாச்சி..

அருமையான கவிதை.. நேற்றைய விவாதம் இன்று கவிதையானது அழகு..

அது ஒரு கனாக் காலம் said...

கவிஜை சூப்பர் -ஐயனாரை சமீபத்தில் பார்த்தீர்களா ???

துபாய் ராஜா said...

//என்னைப் பற்றிய கழிவிரக்கங்கள் ஏதுமின்றி
கடந்து போகும் குளிரூட்டப்பட்ட வாகனங்களிலும்
இருக்கக் கூடும்
வெம்பிப் பழுத்த வேதனையுடன்
சில மனிதர்கள்//

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பதை அழகாக கூறியுள்ளீர்கள்.

jackiesekar said...

என்னைப் பற்றிய கழிவிரக்கங்கள் ஏதுமின்றி
கடந்து போகும் குளிரூட்டப்பட்ட வாகனங்களிலும்
இருக்கக் கூடும்
வெம்பிப் பழுத்த வேதனையுடன்
சில மனிதர்கள்//

மேலுள்ள வரிகளளின் எதார்த்தம் என்னை சிலிர்க்க வைத்தது அன்னாச்சி

கோவி.கண்ணன் said...

அண்ணாச்சி பின்னவீனத்துவமா ?

மீ த எஸ்கேப்பு !

☀நான் ஆதவன்☀ said...

எதிர் பதிவு வரும்னு பார்த்தா எதிர் கவிஜ வருது....

இந்த கவுஜ சுலுவா புரியுது அண்ணாச்சி. மடக்கி மடக்கி இன்னும் கொஞ்சம் புரியாத மாதிரி எழுதுங்க அண்ணாச்சி.

☀நான் ஆதவன்☀ said...

//காயத்ரி said...
ஆஹா! ஓஹோ! அருமையான கவுஜ//

கவிதாயினியே சொன்ன பிறகு மறுப்பேது...

ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் :))

கலையரசன் said...

என்ன அண்ணாச்சி..
வண்டியில போகும்போது
யாரையாவது பாத்தீங்களா?

மஞ்சூர் ராசா said...

தற்போது தினம் இதே அனுபவமே. \

இன்னும் கொஞ்சம் நன்றாக செதுக்கியிருக்கலாமோவென தோன்றுகிறது.

RAD MADHAV said...

வண்டி பிரேக் டவுன் ஆனதுனால ஒரு தடவ நடந்துக்கே இப்படியா ....
கலக்குறீங்க அண்ணாச்சி ....
உங்கள டெய்லி நடக்க வச்சா இந்த மாதிரி பல நல்ல கவிதைகள் வரும்னு நினைக்கிறேன்.:-)

ஆசிப் மீரான் said...

ஏன் கவிதாயினிகளுக்குத்தான் கவிதை சொந்தமா என்ன? நாங்களும் கவுஞர்கள்தான்.

நன்றி ஆயில்யன்! வெயிலில் இருப்பவர்கள் மட்டுமே கஷ்டப்படுகிறார்கள் என்ற கூற்று முற்றிலும் சரியில்லை என்பதைச் சொல்லத்தான் இந்தக் கவுஜை

நன்றி செந்தில்
ம்ம். கவிதையின் உட்பொருளைப் புரிந்து கொண்டமைக்கு :-)

அய்யனாரைப் பார்த்தா கவிதை எழுத முடியுமா? அப்பாவியா இருக்கீங்க சுந்தர் :-)

ஆசிப் மீரான் said...

நன்றி துபாய் ராஜா!
நம்ம பதிவர்களுக்கான குழுமத்துல சேருங்க அங்க மக்கள் மொக்கை போடுறாங்கள்ல :-)

நன்றி ஜாக்கி! உங்கள் நட்சத்திரவாரம் வெகு சுவாரஸ்யமாக இருந்தது உங்களது பணி சிறக்க வாழ்த்துகள்!!

கோவியாரே

இதுல புரியாத விசயம் ஏதாவதிருக்கா என்ன? புரியுற மாதிரி எழுதுனதுக்கே இப்படியா? :-)

ஆசிப் மீரான் said...

எதுக்கு எதிர் பதிவு? ஓ அதுக்கா?
ஜூட்ல விட்டாச்சு :-)

ஆமாம் கலை.உன்னை மாதிரியே ஒருத்தர் போனாரு :-)

மஞ்சூராரு

செதுக்கியிருக்கலாம்தான் தெரிஞ்சாதானே?

மாதவ்

உன்னை நடக்க வச்சாலும் எனக்கு நிறைய கவுஜை வரும் நானெல்லம் பொறவிக் கவுஞன் நின்னாலும் நடந்தாலும் படுத்தாலும் கவுஜைதான் எனக்கு பேச்சு மூச்சா எல்லாம்

ஆதிமூலகிருஷ்ணன் said...

மிகவும் நல்லதொரு கவிதை.!

shan said...

நல்ல ஒரு எளிமையான அதேசமயம் கனமான கவிதை..............

shan said...

நல்ல ஒரு எளிமையான அதேசமயம் கனமான கவிதை..............

அது சரி said...

//
என்னைப் பற்றிய கழிவிரக்கங்கள் ஏதுமின்றி
கடந்து போகும் குளிரூட்டப்பட்ட வாகனங்களிலும்
இருக்கக் கூடும்
வெம்பிப் பழுத்த வேதனையுடன்
சில மனிதர்கள்

//

வெம்பி பழுத்த வேதனையுடன் சில மனிதர்கள்...

படிக்கும்போதே ஒரு அழுத்தத்தை உண்டாக்கும் வரிகள்!

கிருத்திகா said...

அருமையான கவிதை...

LinkWithin

Blog Widget by LinkWithin